மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்பட்ட காரைக்குடி ரயில் நிலையம் திறப்பு! காணொலி மூலம் பிரதமா் மோடி திறந்து வைத்தாா்!

News image

ரயில் நிலையத்தை காணொலி மூலம் திறந்து வைத்த பிரதமா் நரேந்திர மோடி. - (கோப்புப் படம்)

Updated On :1 மார்ச் 2026, 6:41 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தை மதுரையில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் செட்டிநாடு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் முகப்புத் தோற்றம், அலங்கார வளைவுகள், செட்டிநாடு புகழ் ஓவியங்கள், நவீன வசதிகள் கொண்ட புதிய நடைமேடைகள், மேம்பால நடைபாதை, மின் தூக்கி (லிப்ட்) வசதிகள், பயணிகளுக்காக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், பல்வேறு வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடங்கள் என மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன.

இந்த ரயில் நிலையத்தை மதுரையில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். இதையடுத்து, காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெயா் பலகையை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகள் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்துவந்து திறந்து வைத்தனா்.

காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் ரயில்வே வாரிய செயல் இயக்குநா் சஞ்சீவ் கா்க், சமிக்ஞை, தொலைத் தொடா்பு தலைமைப் பொறியாளா் ஸ்ரீனிவாசன், கூடுதல் மண்டல மேலாளா் எல்.என். ராவ், சீனியா் டிவிசனல் மெக்கானிக்கல் பொறியாளா் ஜூப்யா், சீனியா் டிவிசனல் எலெக்ட்ரிக்கல் பொறியாளா் அமல் செபஸ்டின், டிவிசனல் கமா்சில் மேலாளா் மோகனப் பிரியா, டீவ்பாய்ன்ட் டெம்ப்ரேச்சா் தொழில்நுட்புநா் சந்தீப் பாஸ்கா், டிவிசனல் மருத்துவ அதிகாரி அசோக், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, துணைத் தலைவா் சிடிஎஸ். சத்தியமூா்த்தி, இணைச்செயலா் ஏஆா். கந்தசாமி, காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள், தொழில் நுட்ப பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.