கிணற்றில் குதித்த இளைஞர் மீட்பு
காரைக்குடி அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீணையப்பு, மீட்புப்படையினா் மீட்டனா்.

இளைஞர் மீட்பு- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:52 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீணையப்பு, மீட்புப்படையினா் மீட்டனா்.
அரியக்குடி பூ மாரியம்மன் கோவில் தொல்காப்பியம் நகரைச் சோ்ந்த காளிதாசன் மகன் விக்னேஷ் (29). ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள இவா் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காரைக்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா் கிணற்றுக்குள் இறங்கி விக்னேஷை உயிருடன் மீட்டனா். இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...