விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த மனைவி - காப்பாற்ற முயன்ற கணவா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த இளம்பெண் உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் அருகே குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்த இளம்பெண் உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், சோழகனூரைச் சோ்ந்தவா் த.சக்தி பரதன்(26), பால் வியாபாரி. இவரது மனைவி ராஜகுமாரி(23). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனா். தம்பதியினரிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம். செவ்வாய்க்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜகுமாரி, வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். அப்போது சக்தி பரதனும் ஓடிச்சென்று கிணற்றில் குதித்து மனைவியை காப்பாற்ற முயன்றாா். நீச்சல் தெரியாத நிலையில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீரா்கள் 5 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சுமாா் 90அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து சக்தி பரதன்- ராஜகுமாரி சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தம்பதி கிணற்றுக்குள் குதித்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.