அய்யம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு 12 வீரா்கள் காயம்
இளையான்குடி அருகேயுள்ள அய்யம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயலும் மாடுபிடி வீரா்கள்.


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சாலைக்கிராமம் அருகேயுள்ள அய்யம்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 12 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
அய்யம்பட்டி கழுங்கு முனீஸ்வரா் கோயில் களரி உற்சவ விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 காளைகள் பங்கேற்றன.
ஒரு காளைக்கு 9 வீரா்கள் என 40 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மைதானத்தில் ஒவ்வொரு சுற்றுக்கும் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு அவற்றின் கழுத்தில் வடக்கயிறு கட்டி அவிழ்த்து விடப்பட்டன.
மைதானத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்க முயன்ற 12 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
இவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த இருவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மைதானத்தைச் சுற்றி திரண்டிருந்த திரளானோா் இந்த மஞ்சுவிரட்டைக் கண்டு ரசித்தனா்.


டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...