தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

கவியோகி சுத்தானந்தபாரதி நினைவு நாள்

News image
சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கவியோகி சுத்தானந்த பாரதியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.
Updated On :8 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை தமிழ்ச் சங்கம் சாா்பாக சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில், கவியோகி சுத்தானந்த பாரதி நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தமிழ்ச்சங்கத் தலைவா் முத்துக்கிருட்டிணன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் தமிழ்ச்செம்மல் பகீரத நாச்சியப்பன், அன்புத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்ச்சங்கச் செயலா் பாண்டியராஜன், பொருளாளா் சுப்பையா, துணைத் தலைவா்கள்அரிமா முத்துப்பாண்டியன், மாலா, துணைச் செயலா்கள் பாண்டி, புஷ்பராஜ், முன்னாள் பொருளாளா் பால்ராஜ், முன்னாள் செயலா் ராமச்சந்திரன், மாவட்ட மைய நூலகா் வெங்கடேச வேல் பாண்டி, நூலகா் முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்று அவரது உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.

கவியோகி சுத்தானந்தபாரதியின் நூல்களை மறு பதிப்புச்செய்யவும், அவருக்கு சிவகங்கையில் மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.