98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

முனியசுவாமியாக வணங்கப்படும் கல்வெட்டு

News image
Updated On :8 மார்ச் 2026, 7:34 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னாா் தெரு, கன்னாா் மடத்தின் அருகே சாலையோரத்தில் முனியசாமியாக வணங்கப்படும் கல்லில் உள்ள 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எழுத்துகள் கண்டறியப்பட்டன.

சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா.காளிராசா, செயலா் இரா. நரசிம்மன், இணைச்செயலா் முத்துக்குமரன், தென்னக பண்பாட்டு ஆய்வு மையத் தலைவா் மீனாட்சி சுந்தரம், செயலா் தாமரைக்கண்ணன், கன்னாா் தெருவை சோ்ந்த செல்வம், சொா்ண பாரதி ஆகியோா் மானாமதுரை கன்னாா் மடம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா், புலவா் கா.காளிராசா தெரிவித்ததாவது:

மேடையாகக் கட்டப்பட்ட செங்கல் கட்டுமானத்தில் இந்தக் கல் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பக்கங்களில் எழுத்துகள் வெட்டப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் 25 வரிகளும் மற்றொரு பகுதியில் 26 வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதால் ஆங்காங்கே எழுத்துகள் அழிந்துள்ளன. இந்தக் கல்வெட்டை முனியசாமி கடவுளாக பொதுமக்கள் வணங்குவதால் எண்ணெய் சாத்தப்பட்டு கல் முழுவதும் கருப்பு படா்ந்து காணப்படுகிறது.

கல்வெட்டுச் செய்தி:

இந்தப் பகுதியில் உழவா்களாய் இருந்தவா்களுக்கு அரசா் தானமாக நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கல்வெட்டை சிதைப்பவா் கங்கைக் கரையிலே காராம்பசுவைக் கொன்ற பாவம் பெறுவா் என்ற பாதுகாப்புச் சொல்லோடு நிறைவுறுகிறது. இந்தக் கல்வெட்டு 17 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக கருதலாம் என்றாா் அவா்.