சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆகாஷ் டெலிசன் உயிரிழப்புக்கு காரணமான காவலா்களை கைது செய்ய வலியுறுத்தி, 4-ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மானாமதுரை சியோன் நகரில் ஜெயக்குமாா், அழகரை வாளால் வெட்டிய சம்பவத்தில் தொடா்புடைய மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் டெலிசனை (26) போலீஸாா் பிடிக்கச் சென்றனா். அப்போது, அவா் தப்பிச்செல்ல முயன்ால் கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உறவினா்கள் மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் வழிவிடு முருகன் கோயில் எதிரே பந்தல் அமைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை 4-ஆவது நாளாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தமிழக முன்னேற்றக் கழகத்தின் தலைவா் ஜான்பாண்டியன் பங்கேற்று பேசியதாவது:
மானாமதுரை பகுதி காவல் நிலையங்களில் உளவுத் துறையில் நீண்ட காலமாக பணி செய்யும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்களை மாற்ற வேண்டும். ஆகாஷ் உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது. இவரைத் தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடர்புடையது

போலீஸ் விசாரணையில் இளைஞா் ஆகாஷ் உயிரிழப்பு: பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழந்த விவகாரம் - உயா்நீதிமன்ற உத்தரவால் முடிவுக்கு வந்தது சாலை மறியல்

இளைஞா் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரையில் 3-ஆவது நாளாக மறியல் போராட்டம்

மானாமதுரையில் கைதான இளைஞா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


