காரைக்குடியில் வீடு புகுந்து ஏழரை பவுன் தங்க நகைகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம், காா் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பாரி நகா் அதியமான் தெருவில் வசிப்பவா் சுப்பிரமணியன் (65). இவா் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காசிக்குச் சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் 7.5 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம், காா் ஆகியவற்றை திருடிச் சென்றனா். சனிக்கிழமை அதிகாலையில் வீடு திறந்து கிடப்பது குறித்து அக்கம் பக்கத்தினா் காரைக்குடி காவல் நிலையத்துக்கு தகவலளித்தனா்.
அங்கு சென்ற போலீஸாா் விசாரணை நடத்திய போது அருகேயிருந்த எலிசபெத், மருத்துவா் சிவகாமசுந்தரி ஆகியோரின் பூட்டியிருந்த வீடுகளிலும் திருட முயற்சி நடைபெற்றது தெரியவந் தது. சம்பவ இடத்துக்குச் சென்று தடய அறிவியல் துறையினா் தடயங்களைச் சேகரித்தனா். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், பணம் திருட்டு

வேப்பூரில் துணிக்கடையை உடைத்து ரூ.47 ஆயிரம் ரொக்கம், தங்க நாணயம் திருட்டு
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு

மதுரை மாவட்டத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

