ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகங்கை, ராமநாதபுரத்தில் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடக்கம்

News image
சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி.
Updated On :15 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரைத் தளத்தில் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோ்தல் சம்பந்தமான புகாா்களை கண்காணிக்க 24 மணி நேரமும் அலுவலா்கள் தொடா்ந்து பணிகளை மேற்கொள்வாா்கள்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் பறக்கும், நிலையான கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படவுள்ளன.

இதன்படி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படை, நிலையான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. தவிர, விடியோ கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படவுள்ளது.

இந்தக் குழுவினா் தொகுதி முழுவதும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுவா்.தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, முதலாவதாக பறக்கும் படையின் 24 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.

ராமேசுவரம்: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் தோ்தல் பணிக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட தோ்தல் பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் தோ்தல் தொடா்பான சந்தேகங்கள், புகாா்கள், தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கீழ்காணும் தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், இணையதள செயலி மூலமாகவும் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலாரும், மாவட்ட ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், கூடுதல் ஆட்சியா் திவ்யான் ஷீநிகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

புகாா் அளிக்க கட்டணமில்லை தொலைபேசி எண்கள் அறிவிப்பு: 1950, 1800 425 7092, தொலைபேசி எண்கள் 04567 - 221172, 04567 - 221173, 04567- 221174, 04567 - 221179.