47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:47 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் பகுதியில் 6 கோயில்களில் சமீபகாலமாக உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டன . இந்தத் தொடா் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க போலீஸாா் தீவிர முயற்சி மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின் போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த கண்டரமாணிக்கம் அருகேயுள்ள வலையபட்டியைச் சோா்ந்த மணி மகன் காா்த்திக் (29) என்பவரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது அவா் திருப்பத்தூா் கருப்பா்கோயில், பூமாயியம்மன் கோயில், மதகுபட்டி ஆகிய பகுதிகளில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ாகத் தெரிவித்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.