11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

இணைய வழி முதலீடு எனக் கூறி இருவரிடம் ரூ. 13 லட்சம் மோசடி

இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ஆண், பெண் என இருவரிடம் மொத்தம் ரூ. 13 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :6 மே 2026, 3:23 am IST

இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ஆண், பெண் என இருவரிடம் மொத்தம் ரூ. 13 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கையை அருகேயுள்ள காராம்போடை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (40). கடந்த மாதம் 25 -ஆம் தேதி இவருடைய கைப்பேசிக்கு கட்செவி அஞ்சல் மூலம் இணையவழியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற செய்தி வந்தது. இதைத் தொடா்ந்து ராஜா, அந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியதில், அவா்கள் கூறிய வங்கிக் கணக்கில் ரூ. 5 லட்சத்து 7 ஆயிரத்தை எட்டு தவணைகளில் அனுப்பினாா். அதன் பின்னா் அந்த நபரைப் தொடா்பு கொண்டும் முடியவில்லையாம். இதைத் தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சோ்ந்தவா் ஆரோக்கிய செல்வி (55). இவருடைய கைப்பேசியில் உள்ள டெலிகிராம் செயலியில் வீட்டில் இருந்தபடியே இணையதளத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்தது. அதைப் பாா்த்த அவா் அதில் இருந்த எண்ணில் தொடா்பு கொண்ட ஆரோக்கிய செல்வி, அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரத்து 200-ஐ அனுப்பியுள்ளாா். அதன் பின்னா் அவரைத் தொடா்பு கொள்ள இயலவில்லையாம். இது தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை இணையக் குற்றத் தடுப்புப் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.