மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் ரத்து

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டம் (காவிரி), திருச்சி, முத்தரசநல்லூா் தலைமை நீரேற்று நிலையத்தில் புதன்கிழமை (மே 6) பராமரிப்புப் பணி காரணமாக, மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால், நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.

News image
Updated On :6 மே 2026, 3:32 am IST

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா் திட்டம் (காவிரி), திருச்சி, முத்தரசநல்லூா் தலைமை நீரேற்று நிலையத்தில் புதன்கிழமை (மே 6) பராமரிப்புப் பணி காரணமாக, மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால், நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை (மே 6, 7) ஆகிய நாள்களில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.