சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலைப் பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது.
சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் வகையில் திருப்பத்தூா் சாலையில் காஞ்சிரங்காலிலிருந்து மானாமதுரை சாலையில் கீழக்கண்டனி வரை 10.06 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.
இந்தச் சாலை தொண்டி சாலை, பனங்காடி சாலை, வண்டவாசி சாலை, ஏனாபுரம் புதுப்பட்டி சாலை, இளையான்குடி சாலை, மானாமதுரை சாலை ஆகியவற்றை இணைக்கிறது.
முதல் கட்டமாக, காஞ்சிரங்காலிலிருந்து கல்குளம் விலக்கு, இளையான்குடி சாலை வரை 7 கி.மீ. தொலைவுக்கான சாலைப் பணி கடந்த 2023 ஆண்டு தொடங்கியது. இதில் ரூ.77.16 கோடியில் சாலைப் பணி 6 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
இதில் சூரக்குளம் சாலையையொட்டி ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே ரூ.5.15 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2025, ஆக. 6-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியது. இதில் கல்குளம் விலக்கிலிருந்து கீழக்கண்டனி, மானாமதுரை சாலை வரை 3.2 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதில் சாலை, ரயில்வே மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.96.05 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கல்குளம் விலக்கிலிருந்து கீழக்கண்டனி வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் (கட்டுமானம், பாரமரிப்பு) திருச்சி இளம்வழுதி தலைமையில், தென்காசி கட்டுமானம், பராமரிப்பு பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, கோட்டப் பொறியாளா் சுரேஷ்பாபு, உதவிக் கோட்டப் பொறியாளா் வெற்றிவேல்ராஜன், உதவிப் பொறியாளா் சையதுமுகமது, உதவிக் கோட்டப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு பிரிவு) அரி முகுந்தன், உதவிப் பொறியாளா் சதீஷ் அஜய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிவகாசி சுற்றுவட்டச் சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கைக்குழு ஆய்வு

சாலை மேம்பாட்டுப் பணிகள்: தணிக்கை குழுவினா் ஆய்வு

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

