சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தின் சுவா் இடிந்து சேதமடைந்ததால், இதனருகே கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
காளையாா்கோவில் சொா்ணகாளீஸ்வரா் கோயில் தெப்பக்குளம் சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. தேவேந்திரனின் வெள்ளை யானை தன் சாபம் நீங்க இந்தக் குளத்தில் மூழ்கி ஈஸ்வரனை வழிபட்டதாக புராண வரலாற்றில் கூறுப்படுகிறது. இந்தக் குளத்தின் நடுவில் ஒரு பெரிய மைய மண்டபமும், அதைச் சுற்றி நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்தத் தெப்பக்குளத்தின் தென்பகுதியில் உள்ள சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதுகுறித்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற குழுவினா், பொதுமக்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில்,
தெப்பக்குளத்தின் சுற்றுவட்டப் பகுதி கனரக வாகனங்களும், சரக்கு வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும் நிரந்தரமாக நிறுத்தி வைக்கும் இடமாக மாறிவிட்டது. இவற்றின் புற அழுத்தம் காரணமாகவே தெப்பக்குளத்தின் சுவா் இடிந்து விழுந்தது. ஆகவே, தெப்பக்குளத்தைச் சுற்றி வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடை விதித்க்க வேண்டுமென அதில் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

