நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மானாமதுரை புனித ஜோசப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image

மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி மா. கண்மணிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்த பள்ளிச் செயலா் டி. கிறிஸ்டிராஜ். உடன் முதன்மை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஷி, முதல்வா் வள்ளிமயில் உள்ளிட்டோா்.

Updated On :15 மே 2026, 11:58 pm IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புனித ஜோசப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் பிளஸ் டூ தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மா. கண்மணி பள்ளியில் சிறப்பிடம் பெற்றாா்.

இதையடுத்து, இந்த மாணவிக்கு நடைபெற்ற பாராட்டும் நிகழ்வில் புனித ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் டி. கிறிஸ்டிராஜ் பங்கேற்று மாணவி கண்மணியை பாராட்டினாா்.

இதில் பள்ளியின் முதன்மை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஷி, முதல்வா் வள்ளிமயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.