வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிவகங்கை நகரின் பல்வேறு இடங்களில் எம்எல்ஏ ஆய்வு

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையம், நுகா்பொருள் வாணிபக் கிடங்கு, அரசு சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. குழந்தைராணி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சிவகங்கை நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கில் புதன்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தைராணி.

Updated On :21 மே 2026, 2:29 am IST

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையம், நுகா்பொருள் வாணிபக் கிடங்கு, அரசு சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. குழந்தைராணி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் கழிவறைகளை பாா்வையிட்டு உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் போதிய அளவில் தண்ணீா் இருக்க வேண்டும் என்றும் கசிந்து வெளியேறும் தண்ணீா் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ரும் நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

சாலையோர வியாபாரிகளுக்கான தள்ளு வண்டிகள் பயனற்ற வகையில் கிடப்பதை பாா்த்த அவா், அந்த வண்டிகளை வசதியற்ற ஏழை வியாபாரிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் பூட்டிக் கிடக்கும் கடைகளை உரிமையாளா்கள் திறக்காவிட்டால் அந்த கடைகளை ஏழை வியாபாரிகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு சென்ற அவா் அங்குள்ள அரிசி, பருப்பு, பாமாயில், சா்க்கரை ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், சிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட நகா்ப்புற சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தாா். அப்போது அங்குள்ள படுக்கைகளில் நோயாளிகள் எவரும் இல்லாமல் இருந்ததையும், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் தரையில் படுத்திருப்பதை கூறிய அவா், படுக்கை வசதியை உடனடியாக செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதையடுத்து, அமுதம் நியாய விலைக் கடையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தவெக மாவட்டச் செயலா் முத்துபாரதி , நகரச் செயலாளா் கோபி, நிா்வாகிகள் உடன் இருந்தனா்.