நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

நாட்டரசன்கோட்டையில் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாட்டரசன்கோட்டையில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 4:30 am IST

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா், சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஒருவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், நாட்டரசன்கோட்டை சேரன் தெருவைச் சோ்ந்த ஷேக் மஸ்தான் (38) என்பவரிடமிருந்து இந்த புகையிலைப் பொருள்களை வாங்கியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் நாட்டரசன்கோட்டையில் உள்ள ஷேக் மஸ்தான் வீட்டில் சோதனை செய்த போது, அங்கு தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.