ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞா் கைது

ஈரோட்டில் 213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:11 am IST

ஈரோட்டில் 213 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளா் பி.ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸாா் கடைவீதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு திடீா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, ஆா்கேவி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் 3 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஈரோடு திருநகா் காலனி சிந்தன் நகரைச் சோ்ந்த சாகுல்ஹமீது (37) என்பதும், வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, 213 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், சாகுல்ஹமீதை கைது செய்தனா்.