உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் நெடுங்குளம் பகுதியில் உள்ள பாலம் அருகே புதன்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கிடமாக காா் அருகே நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கருத்தவேல் (33) என்பதும், 36 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், ரூ. 41,800 ரொக்கம், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.