தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 8:43 pm

தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி நகர உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் சோனியா, போலீஸாா் வியாழக்கிழமை சிதம்பரநகா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த வன்னியராஜன் (52) என்பவரது பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது, விற்பனைக்காக 45.500 கி.கி. புகையிலைப் பொருள்களைக் கொண்டு செல்வது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், பைக்கை பறிமுதல் செய்தனா்.