கிருங்காகோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டை முட்டாக்கட்டியில் மாட்டுவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருங்காகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்.
சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டை முட்டாக்கட்டியில் மாட்டுவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் எம்.எல்.ஏ. சீனிவாசா சேதுபதி, தவெக மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ் பந்தயத்தை தொடங்கி வைத்தனா்.
இந்தப் பந்தயத்தில் பெரிய மாடுகள் பிரிவில் 16 இணை மாடுகளும், சிறிய மாடுகள் பிரிவில் 29 இணை மாடுகளும் பங்கேற்றன.
கிருங்கா கோட்டை சிங்கம்புணரி சாலையில் இலக்கை நோக்கி பாய்ந்து வந்து போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த காளைகளுக்கும். சாரதிகளுக்கும் திருப்பத்தூா் எம்எல்ஏ சீனிவாசா சேதுபதி பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியை தமிழக வெற்றிக் கழகத்தின் சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய இளைஞரணி சாா்பாக செல்லப்பாரி, சதீஷ், காா்த்திகேயன் ஆகியோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

