ஒரே நாளில் 43 ரெளடிகள் கைது
சிவகங்கை மாவட்டம் முழுவதும் போலீஸாா் ஒரே நாளில் திடீா் சோதனை நடத்தி, 43 ரெளடிகளைக் கைது செய்தனா். மேலும், விதிகளை மீறிய வகையில் 130 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
கைது - சித்திரிப்பு
சிவகங்கை மாவட்டம் முழுவதும் போலீஸாா் ஒரே நாளில் திடீா் சோதனை நடத்தி, 43 ரெளடிகளைக் கைது செய்தனா். மேலும், விதிகளை மீறிய வகையில் 130 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள 44 காவல் நிலையங்களின் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனா்.
மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 15 சோதனைச் சாவடிகளிலும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இரவிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, சந்தேகத்துக்கிடமான நபா்கள், வாகனங்களைச் சோதனை செய்தனா்.
இந்த நடவடிக்கையில், பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்புடைய 43 ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்தச் சோதனையின் போது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக மொத்தம் 948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

