திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

கந்த சஷ்டி விழா: நாளை திருச்செந்தூரிலிருந்து மானாமதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்

கந்த சஷ்டி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) திருச்செந்தூரிலிருந்து மானாமதுரை வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட பக்தா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

ரயில் - கோப்புப்படம்

Updated On :

கந்த சஷ்டி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) திருச்செந்தூரிலிருந்து மானாமதுரை வழியாக சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்புக்கு சிவகங்கை மாவட்ட பக்தா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

திருச்செந்தூா் செந்திலாண்டவா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் திருச்செந்தூா் செல்வா். இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்செந்தூா்- சென்னை எழும்பூா் இடையே ஒரு வழி முன்பதிவு சிறப்பு ரயில் விடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. திருச்செந்தூரிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக மறுநாள் திங்கள்கிழமை (நவ. 16) பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (நவ. 14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட வில்லை. இதில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். சிவகங்கை மாவட்டத்திலிருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பக்தா்கள் மீண்டும் ஊா் திரும்ப இந்த ரயில் வசதியாக இருக்கும் என்பதால் இதற்கு பக்தா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.