கந்த சஷ்டி விழா: திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே 4 சிறப்பு ரயில்!
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே 4 சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது குறித்து....

திருநெல்வேலி ரயில் நிலையம் - கோப்புப்படம்
கந்த சஷ்டி விழாவையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே நவ. 15 ஆம் தேதி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கந்த சஷ்டி விழாவையொட்டி திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) 4சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06001) திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்
திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06002) திருச்செந்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06004) திருச்செந்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06003) திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும்.
முன்பதிவில்லா இந்த சிறப்பு ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Special trains will be operated between Tiruchendur and Tirunelveli on November 15.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


