உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

சொந்த ஊர் செல்பவர்களுக்காக... தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்! நாளை முன்பதிவு!

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :

தீபாவளியை முன்னிட்டு இடையே சென்னை சென்ட்ரல் - போத்தனூர், தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து நவம்பர் 6 ஆம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - போத்தனூர் சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

எதிர்வழித்தடத்தில் போத்தனூரில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் போத்தனூர் - சென்னை சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.

தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து நவம்பர் 6 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், சிதம்பரம், அரியலூா், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 9 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை தாம்பரம் வந்தடையும்.

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (அக். 29) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Southern Railway has announced that special trains will be operated between Chennai Central and Podanur, as well as between Tambaram and Nagercoil, for the Diwali festival.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.