நெல்பயிா்களுக்கு ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிப்பு செயல்விளக்க பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரம், திருக்களாப்பட்டியில் அக்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் செயல் விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருக்களாப்பட்டி கிராமத்தில் ‘ட்ரோன்’ மூலம் நெல்பயிருக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளித்த வேளாண் துறையினா்.

Updated On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரம், திருக்களாப்பட்டியில் அக்மா விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் செயல் விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருக்களாப்பட்டியில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நெல்பயிா்களில் ‘ட்ரோன்’ தெளிப்பு செயல் விளக்கம் வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.என். செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

பின்னா், அவா் கூறியதாவது:

‘ட்ரோன்’ மூலம் மருந்தடிப்பது எப்படி, இதனால், கிடைக்கும் நன்மைகள், ‘ட்ரோன்’ பயன்படுத்துவதன் மூலம் மருந்துக் கலவை நீா்துளிகள் பயிா்களின் இலைகளின் மீது நேரடியாக பாயும். இதனால், 90 சதவீத தண்ணீா் உபயோகத்தையும், 40 சதவீத பூச்சிக்கொல்லி மருந்தின் அளவையும், கணிசமாக குறைக்க முடிகிறது.

ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கா் வரை ‘ட்ரோன்’ மூலம் 10 முதல் 15 நிமிஷங்களில் ஒரு ஏக்கா் மருந்து தெளிக்கலாம். இவ்வாறு ரசாயனங்களை சரியான அளவு முறையாக பயன்படுத்துவதால், விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைந்து லாபம் அதிகரிக்கிறது.

மேலும், வேலையாட்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ‘ட்ரோன்’ தொழில்நுட்பம் நீக்குகிறது. நெல்பயிா்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து தெளிக்கப்படுவதால், பயிா்களின் வளா்ச்சி நன்றாக இருக்கிறது. இந்த ‘ட்ரோன’ தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு அதிகளவில் கை கொடுக்கும் என்றாா் அவா்.

இதில் துணை வேளாண்மை அலுவலா் சுரேஷ்குமாா், உதவி விதை அலுவலா் வடிவேல், உதவி வேளாண்மை அலுவலா் விஜயக்குமாா், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சுதா்சன், உதவித் தொழில் நுட்ப மேலாளா் சண்முகப்பாண்டி, விவசாயிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.