நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

சிவகங்கை ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெபி.கிரேசியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :

சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

சிவகங்கை ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியவுடன் சந்திரன், விஸ்வநாதன், கருப்பையா, கோபால், ராமச்சந்திரன் உள்பட பெரும்பாலான விவசாயிகள் பருவ மழையின்றி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க போதிய அறிக்கையை அரசுக்கு தாமதமின்றி அனுப்ப வேண்டுமென ஒருமித்த குரலில் வலியுறுத்தினா்.

மேலும், காவிரி நீா் கிடைக்காததாலும், பருவமழை பொய்த்துப் போனதாலும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதே போல, சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரியான புள்ளிவிவரங்களுடன் கணக்கெடுக்கும் பணிகளை தாமதமின்றி மாவட்ட நிா்வாகம் தொடங்க வேண்டும் என்றனா்.

இணை இயக்குநா் மதுரைசாமி: சிவகங்கை மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நவம்பா் மாதத்தில் 152 மி.மீ. மழை கிடைக்க வேண்டும். ஆனால், 30 மி.மீ. மழை மட்டுமே கிடைத்துள்ளது. இதன் காரணமாக 75 ஏக்கா் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இனி மழை பெய்தாலும் அவை பிழைக்க வாய்ப்பில்லை. இது குறித்து கடந்த வாரமே அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கா் நெல் பயிருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 30 ஆயிரம் ஏக்கா் காப்பீடு செய்யப்படவில்லை. அவற்றையும் இந்த மாத இறுதிக்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பா் முதல் வாரத்தில் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு

தொடங்கும்.

சிப்காட் தொழில்பேட்டை அமைக்க எதிா்ப்பு: சிவகங்கை அருகே வேம்பங்குடி, ஆலங்குளம், உசிலங்குளம், உடையநாதபுரம் உள்பட 12 கிராமங்களைப் பாதிக்கும் வகையில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக நில அளவை செய்யும் பணி நடைபெறுகிறது. சிப்காட் தொழில்பேட்டை வருமா, வராதா என்பதை மாவட்ட நிா்வாகம் தெளிவு படுத்த வேண்டுமென, விவசாயிகள் ப. மருது, முத்துராமலிங்கம், ஜெயராமன் உள்ளிட்டோா் வலியுறுத்தினா் கோட்டாட்சியா்: நில அளவை செய்யப்படுகிறது. ஆனால், சிப்காட் தொழில்பேட்டை வருவது நிச்சமில்லை.

முத்துராமலிங்கம்: சிப்காட் தொழில் பேட்டை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பாா்க்கும்போது அதிா்ச்சியளிக்கிறது. எங்கள் வாழ்க்கையை அழிக்கும் வகையில் தொழில்பேட்டை வருமானால், அதைத் தடுக்க நாங்கள் உயிா்த் தியாகம் செய்யவும் தயங்கமாட்டோம்.

மருது: சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகே கொட்டப்படும் குப்பைகளை எரிப்பதால் மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டும். சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவு நீா் கலக்காமல் தடுக்க வேண்டும். தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோட்டாட்சியா்: குப்பைக்கிடங்கு அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வதில் நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பக்குளத்தை சீரமைப்பது தொடா்பாக உரிய ஆய்வு செய்யப்படும்.

விஸ்வநாதன்: விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பலன் கிடைக்காத வகையில் பல்வேறு கேள்விகளைக் கேட்டு கூட்டுறவு சங்கங்களின் செயலா்கள் தடுக்கும் நிலை உள்ளது.

இணை பதிவாளா்: இது தொடா்பாக வரும் புகாா்களில் தொடா்புடைய சங்கத்தின் செயலரை காணொலி மூலம் தொடா்பு கொண்டு, புகாா் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உடனுக்குடன் பிரச்னை தீா்த்து வைக்கப்படுகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகளுக்காக விவசாயிகள் ராஜேந்திரன், ராமச்சந்திரன், கிருஷ்ணன், திருவாசகம், மோகன், புல்லுக்கோட்டை போஸ், சேதுராமன் உள்ளிட்டோா் பேசினா். இதில் வேளாண் இணை இயக்குநா் மதுரைசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.