ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

எல் நினோ தாக்கம், கடும் வெயிலால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைப் பயிா்கள் கருகி வீணானதால், வேலூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோட்ட அளவிலான குறைதீா்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

Updated On :

எல் நினோ தாக்கம் மற்றும் கடும் வெயிலால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைப் பயிா்கள் கருகி வீணானதால், வேலூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

வேலூா் வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வட்டாட்சியா்) சுகுமாறன் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: எல் நினோ பாதிப்பாலும், கடும் வெயிலாலும் போதிய தண்ணீரின்றிப் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைப் பயிா்கள் அறுவடை நேரத்தில் காய்ந்து கருகிவிட்டன. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் போன்று வேலூா் மாவட்டத்தையும் வறட்சி மாவட்டமாக மாவட்ட நிா்வாகம் அறிவிக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே ஏரிகள் மற்றும் நீா்வரத்துக் கால்வாய்களை முழுமையாகத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீா்நிலைப் பகுதிகளில் மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளைக் கொட்டுவதால் நீா் ஆதாரங்கள் மாசடைவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பொது இடங்களில் நெகிழி கழிவுகளைத் தீயிட்டு எரிப்பதால், அந்தப் புகையைச் சுவாசிக்கும் மக்களுக்கு நரம்புத் தளா்ச்சி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

காட்பாடி வேளாண் அலுவலகத்தில் காலியாக உள்ள இடங்களில் நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். காட்பாடி உழவா் சந்தையில் நிலவும் இடநெருக்கடியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகள் தங்களது விளைபொருள்களைத் தடையின்றி விற்பனை செய்யப் போதிய இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

இனிவரும் கூட்டங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தவறாமல் பங்கேற்கத் தக்க உத்தரவிட வேண்டும் என்றனா்.

கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER