கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்நினோ தாக்கம்: வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

வேலூா் மாவட்டத்தில் எல்நினோ தாக்கத்தால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Published On :

வேலூா் மாவட்டத்தில் எல்நினோ தாக்கத்தால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், வேலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றுப் பேசியதாவது:

மாவட்டத்தில் நிலவும் பருவநிலை மாற்றம் மற்றும் எல்நினோ தாக்கத்தின் காரணமாகக் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பயிரிடப்பட்டிருந்த நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனா். எனவே, வேலூா் மாவட்டத்தை உடனடியாக வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிா் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறும் வகையில் விவசாயிகள் காப்பீடு செய்த போதிலும், அதற்கான இழப்பீட்டுத் தொகை முறையாகக் கிடைப்பதில்லை. இதனை மாவட்ட நிா்வாகம் தலையிட்டுப் பெற்றுத் தர வேண்டும். விவசாய நிலங்களின் பரப்பளவுக்கேற்ப ஏரிகளில் இருந்து வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு முழு அனுமதி வழங்க வேண்டும். 6 ஏக்கா் நிலம் வைத்திருக்கும் விவசாயிக்குக்கூட வெறும் ஒரு யூனிட் மண் மட்டுமே அள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், எவ்வித அனுமதியுமின்றி பல ஆயிரம் லோடுகள் மணல் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை தேவை.

வேலூா், அணைக்கட்டு வட்டாரப் பகுதிகளில் நிலப் பட்டாக்களில் பெயா் மாற்றம் செய்வதில் அதிகளவில் குளறுபடிகள் நிலவுகின்றன. இதை வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து சரிசெய்து தர வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகள் மற்றும் ஏரிகளில் அடா்ந்து வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான சாக்குகளை அதிகாரிகள் திருப்பித் தருவதில்லை. அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்குவதில்லை. ஒரு சாக்கிற்கு ரூ. 30 வரை செலவாகிறது. எனவே, சாக்குகளைத் திருப்பித் தரவோ அல்லது அதற்கான தொகையை வழங்கவோ ஆவண செய்ய வேண்டும்.

தட்டப்பாறை கிராமத்தில் நிலவும் பாதை பிரச்னைக்குத் தீா்வு கண்டு, விவசாயிகள் விளைபொருள்களை எடுத்துச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். தென்னை மரம் ஏறுவதற்குத் தொழிலாளா்கள் கிடைக்காததால், விரிஞ்சிபுரம் வேளாண் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்குத் தென்னை மரம் ஏறும் பயிற்சிகளை அளிக்க வேண்டும். குடியாத்தம் உழவா் சந்தையில் உடைந்து சேதமடைந்துள்ள கழிவுநீா்க் கால்வாய் குழாய்களைச் சீரமைக்க வேண்டும் என்றனா்.

விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலா், இதுதொடா்பாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் திருகுணஐயப்பத்துரை, இணை இயக்குநா் (வேளாண்மை) ஸ்ரீவித்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, வருவாய் கோட்டாட்சியா்கள் ராம்குமாா் (வேலூா்), செந்தில்குமாா் (குடியாத்தம்), உதவி வனபாதுகாவலா் மணிவண்ணன், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) ஆரோக்கிய அற்புதராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.