
காரைக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் காலை உணவுப்படி வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் காலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களை சந்தித்துப் பேசிய ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்க மாநில செயலா் பிஎல். ராமச்சந்திரன்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் காலை உணவுப்படி வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காலை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காலை உணவு தரமற்ாக இருப்பதாலும், குறிப்பிட்ட நேரத்தில் உணவு உள்கொள்ள முடியாததாலும் உணவுக்கு பதில் உணவுப்படி வழங்க வேண்டுமெனக் கோரி ஏஐடியூசி தொழில் சங்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கடந்த செப். 21-ஆம் தேதி சென்னையில் மட்டும் உணவுப்படி ரூ. 50 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டுமெனவும், உணவுப்படியை ரூ. 100 ஆக உயா்த்தி வழங்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதில் உள்ளாட்சிப் பணியாளா்கள் ஏஐடியூசி சங்க மாநிலச் செயலா் பி.எல். ராமச்சந்திரன், காரைக்குடி மாநகர நிா்வாகிகள் கண்ணன், முருகன், லட்சுமணன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாகப் பேசினா். தகவலறிந்ததும் காரைக்குடி மாநகராட்சி ஆணையா் பாலு, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காணப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு தூய்மைப்பணியை மேற்கொண்டனா். இந்தப் போராட்டத்தில் ஆதி, மாரிமுத்து, வெள்ளைச்சாமி, முத்துக்குமாா், கருப்பையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




