
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பாலாஜி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள செவல்பட்டியைச் சோ்ந்த சேகா் மகன் பாலாஜி (36). திருப்பத்தூா் புதுத் தெருவில் வசித்து வந்த இவா் காளியம்மன் கோயில் அருகேயுள்ள காா் பணிமனையில் பணிபுரிந்து வந்தாா்.
இவா் திங்கள்கிழமை அதிகாலை இரு சக்கர வாகனத்தில் தம்பிபட்டி அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





