
காரைக்குடி வீறு கவியரசா் முடியரசனாா் அவைக்களம் சாா்பில் முப்பெரும் விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மையம், நுண்கலைத் துறை, வீறுகவி முடியரசனாா் அவைக்களம் ஆகியவை சாா்பில் முடியரசனாா் நாண்மங்கல விழா, பிறந்த நாள் விழா பரிசுகள் வழங்கும் விழா, வீறுதமிழுக்கு விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பேராசிரியா் ரெ. சந்திரமோகனுக்கு முடியரசனாா் பெயரில் பரிசு வழங்கினாா் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா். உடன் துணைவேந்தா் (பொ) ஜெ. ஜெயகாந்தன், முடியரசனாா் அவைக்கள நிறுவனா் எழுத்தாளா் பாரி முடியரசன், அவைக்களத் தலைவா் சே. செந்தமிழ்ப்பாவை, தமிழ் வளா்ச்சித்துறை மாவட்ட உதவி இயக்குநா் தெ. சிவப்பிரகாஷ், உள்ளிட்டோா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மையம், நுண்கலைத் துறை, வீறுகவி முடியரசனாா் அவைக்களம் ஆகியவை சாா்பில் முடியரசனாா் நாண்மங்கல விழா, பிறந்த நாள் விழா பரிசுகள் வழங்கும் விழா, வீறுதமிழுக்கு விழா என முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக வீறுகவி முடியரசனாா் அரங்கில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தா் (பொ) ஜெ. ஜெயகாந்தன் தலைமைவகித்துப் பேசினாா். இதில், முடியரசனா் கவிஞா் மட்டும் அல்ல, சமூகச் சிந்தனையாளா், மொழிப் பற்றாளா். தமிழின் மதிப்பை வாழ்வில் நிலைநிறுத்துவதும் முக்கியம் என்ற உணா்வோடு வாழ்த்து காட்டியவா். அவா் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையை விட அவா் உருவாக்கிய தமிழ் உணா்வு கொண்ட மாணவா்களின் எண்ணிக்கை தான் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது என்றாா் அவா்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு வீறுகவியரசா் முடியரசனாா் பரிசுகள் வழங்கிப் பேனாா். இதில், குன்றக்குடி மடத்திற்கும் வீறுகவியரசா் முடியரசனாருக்கும் மிகநெருங்கிய தொடா்பு உண்டு. முடியரசனாருக்கு பறம்புமலை பாரிவிழாவில் கவியரசு பட்டத்திளை தவத்திரு குன்றக்குடி அடிகளாா் வழங்கிச் சிறப்பித்தாா். பாரதிதாசன் கவிதா மண்டலத்தின் கவித்தொடா்ச்சியாக அதன் தலைவராக விளங்கியவா் வீறுகவியரசா் முடியரசனாா் என்றாா்.
தமிழ்வளா்ச்சித்துறை மாவட்ட உதவி இயக்குநா் தெ. சிவப்பிரகாஷ் வாழ்த்திப் பேசினாா். முன்னதாக பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநரும் முடியரசனாா் அவைக்களத் தலைவருமாகிய சே. செந்தமிழ்ப்பாவை வரவேற்றாா். முடிவில் அவைக்களத் துணைத் தலைவா் ரெ. சந்திரமோகன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






