அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

ஆற்று மணல் திருட்டு: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டடப் பணிக்கு ஆற்று மணலை திருடியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டடப் பணிக்கு ஆற்று மணலை திருடியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகே மேலநெட்டூா் கிராமத்தில் சரவணன் என்பவா் கட்டடப் பணிக்காக அனுமதி இல்லாமல் ஆற்று மணலை குவித்து வைத்திருந்தாா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் உமா மகேஸ்வரி மானாமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதன்பேரில் அங்கு சென்று போலீஸாா் விசாரித்தபோது அது திருடப்பட்ட மணல் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணன், மணல் அள்ள லாரி வழங்கிய கொம்புக்காரனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமா் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா். மேலும் இடைத் தரகா் முருகானந்தம், லாரி ஓட்டுநா் அஜித்குமாா் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.