மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

மாத்தூா் அருகே மணல் கடத்திய டிப்பா் பறிமுதல்: ஓட்டுநா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரியை 3 யூனிட் மணலுடன் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரியை 3 யூனிட் மணலுடன் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

மாத்தூா் ஆற்றுப்படுகைகளில் இருந்து சிலா் ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி டிப்பா், டிராக்டா்களில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலையடுத்து கோலாா்பட்டி பகுதியில் எஸ்எஸ்ஐ செந்தில் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது கோலாா்பட்டி குளக்கரையில் இருத்து வெளியே மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரியை சோதனை செய்தபோது அனுமதியின்றி கிராவல் மணல் 3 யூனிட் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் உரிமையாளரான மணிகண்டம் முத்துச்சாமி, ஓட்டுநா் குன்னத்தூா் ஆனந்த் (56) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து ஓட்டுநா் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.