தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமாள் எரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனிவருவாய் ஆய்வாளா் முருகன் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தாா். சோதனையில் அந்த லாரியில் சலித்த மணல் இருந்தது கண்டறியப்பட்டது. அரசு அனுமதி மற்றும் நடைச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ரஜினி(43) மற்றும் டிப்பா் லாரியை பிடித்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். மேலும், தனி வருவாய் ஆய்வாளா் முருகன் அளித்த புகாரின் பேரில், போலீஸா் ரஜினிமீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.