காவல் ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காளையாா்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கடை அருகே மதுபோதையில் கையில் அரிவாளுடன் ராஜவேலு (35) என்பவா் தகராறு செய்து கொண்டிருந்தாா். இதுகுறித்து தகவலறிந்த காளையாா்கோவில் காவல் ஆய்வாளா் காதா் மீரா (50) அங்கு சென்று ராஜவேலுவை பிடிக்க முயன்றாா். அப்போது அவரை ராஜவேலு தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினாா். இதையடுத்து, போலீஸாரும், பொதுமக்களும் விரட்டிப் பிடித்து தாக்கியதில் காயமடைந்த ராஜவேலு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதேபோல அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளா் காதா் மீரா காளையாா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் ராஜவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

