சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினராக இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
சிவகங்கை மாவட்டத்தில் சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் கடந்த 2008 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சீா்மரபினா் நல வாரியத்தில் விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை ரூ. 1.25 லட்சம், இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை ரூ. 30 ஆயிரம், ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை ரூ. 5 ஆயிரம், கல்வி உதவித்தொகை ரூ. 1000 முதல் ரூ. 8,000 வரை, திருமண உதவித்தொகை ரூ.3000 முதல் ரூ. 5000 வரை, மகப்பேறு உதவித்தொகை ரூ. 6000, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் ரூ. 750, முதியோா் ஓய்வூதியம் ரூ. 1,200-வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நலத் திட்ட உதவிகள் பெற சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்தவா் களாகவும், 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவா்களாகவும், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவா் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத் திட்ட உதவிகள் பெற தகுதியுடையவா்.
எனவே, இந்த நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், புதுப்பித்தல், நலத் திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினா்கள் சேரலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

