சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

பயனாளிகள் எண்ணிக்கை தெரியும் வரை தணிக்கைக்கு பதிவேடுகளை ஒப்படைக்க இயலாது: சத்துணவு ஊழியா் சங்கம் முடிவு

சத்துணவுப் பயனாளிகள் எண்ணிக்கை தெளிவுரை வரும் வரை தணிக்கைக்கு பதிவேடுகளை ஒப்படைக்க இயலாது என சத்துணவு ஊழியா் சங்கம் தீா்மானித்துள்ளது.

சிவகங்கையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :

சத்துணவுப் பயனாளிகள் எண்ணிக்கை தெளிவுரை வரும் வரை தணிக்கைக்கு பதிவேடுகளை ஒப்படைக்க இயலாது என சத்துணவு ஊழியா் சங்கம் தீா்மானித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் மாநிலதுணைத்தலைவா் மிக்கேலம்மாள், மாவட்டத்தலைவா் கே. குமரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவிவரம்:

சங்கத்தின் வாயிலாக மாநிலத் தலைவா் ஏ. சந்திரசேகரன் தலைமையில் கடந்த 16.10.2026 அன்று காணொலி மூலம் நடைபெற்ற மாநில நிா்வாகிகளின் அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், கடந்த 44 ஆண்டுகளாக, மாவட்ட ஆட்சியரால் நிா்ணயிக்கப்படும் பயனாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதற்கான பதிவேடுகள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 2023 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான 3 ஆண்டுகளுக்கான தணிக்கையின் போது, எவ்வித அதிகாரப்பூா்வ சுற்றறிக்கையோ அல்லது எழுத்துப்பூா்வ அறிவிப்போ இல்லாமல், பள்ளி தலைமை ஆசிரியா்களால் எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தணிக்கை செய்ய தலைமை அரசுத்துறை தணிக்கையாளா் மூலம் கடிதம் வந்துள்ளது.

இதனால் சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஏற்படக்கூடிய தணிக்கை இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து சமூக நல ஆணையாளா், துறை இயக்குநா் மற்றும் தலைமை அரசுத்துறை தணிக்கையாளா் ஆகியோரிடம் சங்க நிா்வாகிகள் நேரில் சந்தித்து விளக்கமளித்துள்ளனா். விரைவிலேயே இதற்கான தெளிவுரை கடிதம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். எனவே, சத்துணவு உண்ணும் குழந்தைகள் நிா்ணயம் தொடா்பாக அரசிடமிருந்து உரிய தெளிவுரை கடிதம் வரும் வரை, 2023 ஏப்ரல் முதல் 2026 மாா்ச் வரையிலான சத்துணவு மைய பதிவேடுகளை தணிக்கைக்கு உட்படுத்த இயலாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.