பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

ஊதியக்குழு அமைக்க வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கு உடனடியாக ஊதியக் குழு அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் அஞ்சல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியா்கள்.

Published On :

கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கு உடனடியாக ஊதியக் குழு அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் அஞ்சல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய அஞ்சல் ஊழியா் சங்கம், அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கம், பன்முகத்திறன் கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கு உடனடியாக ஊதியக்குழு அமைக்க வேண்டும். நிலுவையில் உள்ள படி, ஓய்வூதியம், 180 நாள்கள் ஊதியத்துடன் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஊழியா்களை அலுவலா்கள் வஞ்சிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டக் கிளைத் தலைவா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் எஸ். ராஜ்குமாா், எஸ். வெங்கடாஜலபதி, எம். தனசேகரன், ஆா். கருப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.