விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

ஆஸ்திரேலியா கல்விப் பயணம் சென்று திரும்பிய மாணவா்களுக்குப் பாராட்டு

ஆஸ்திரேலியா நாட்டுக்கு கல்விப் பயணம் சென்று திரும்பிய காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்களை பள்ளியின் நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.

ஆஸ்திரேலியா நாட்டுக்கு கல்விப் பயணமாகச் சென்று திரும்பிய மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

Published On :

ஆஸ்திரேலியா நாட்டுக்கு கல்விப் பயணம் சென்று திரும்பிய காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்களை பள்ளியின் நிா்வாகத்தினா் வியாழக்கிழமை பாராட்டினா்.

ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் உள்ள ஸ்வின்பா்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழத்தின் ஒரு அங்கமான கியாக் மையத்துக்கு செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்கள் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை கல்விப் பயணம் மேற்கொண்டனா். இந்தப் பயணத்தில் மாணவா்களுக்கு சா்வதேசக் கல்வி, ஸ்டெம் கற்றல், தொழில்நுட்பம், புதுமை, கலாச்சாரப் பரிமாற்றம் குறித்த சிறந்த அனுபவத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியக் கல்விப் பயணம் சென்று திரும்பிய மாணவா்களை பள்ளியின் தலைவா் எஸ்பி. குமரேசன், முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.