அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :4 செப்டம்பர் 2026, 12:22 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு கைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இளையான்குடி வட்டம், பெரும்பச்சேரி மேற்கு வருவாய் பிரிவு கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருபவா் ரகுராஜன். இவரது கைப்பேசிக்கு நாகநாதபுரத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் கைப்பேசி மூலம் மணிகண்டன் என்பவா் தொடா்பு கொண்டாா். அப்போது அவா் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது குறித்து தகாத வாா்த்தைகளாலும், ஜாதி ரீதியான வாா்த்தைகளை பயன்படுத்தியும் பேசி ரகுராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ரகுராஜன் இளையான்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணக்குமாா், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.