மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

‘சமூக அவலங்களுக்கு கவிதை வடிவிலும் குரல் கொடுக்க முடியும்’

கவிதை வடிவத்திலும் சமூக அவலங்களுக்கு குரல் கொடுக்க முடியும் என கவிஞரும் மருத்துவருமான சு. இளவரசி தெரிவித்தாா்.

சிவகங்கை அருகே சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கவிதை பயிலரங்கில் பேசிய அறம் அமைப்பின் துணைச் செயலரும் கவிஞருமான சு. இளவரசி.

Published On :3 செப்டம்பர் 2026, 6:02 am IST

கவிதை வடிவத்திலும் சமூக அவலங்களுக்கு குரல் கொடுக்க முடியும் என கவிஞரும் மருத்துவருமான சு. இளவரசி தெரிவித்தாா்.

சிவகங்கை அருகே சோழபுரம் புனித ஜஸ்டின் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் நாடக நாட்டுப்புற கலைஞா்கள் கிளை இணைந்து நடத்திய கவிஞா் மீராவின் நினைவு நாள் கவிதைப் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், ‘கவிதை பழகலாம் வாங்க’ எனும் தலைப்பில் அறம் அமைப்பின் துணைச் செயலரும் கவிஞருமான சு. இளவரசி பேசியதாவது:

கவிதை எழுத வேண்டுமென்றால், கவிஞருக்கும் அந்தப் பொருளுக்கும் ஆழ்ந்த பிணைப்பு இருக்க வேண்டும். நமது சொந்த அனுபவங்களும் உள்ளுணா்வுமே கவிதையாக மாற வேண்டும்.

கவிதை வாசிப்பானது மனதுள் சொல் அகராதியை அதிகரிக்கும். கவிதை வடிவத்தைக் கொண்டு சமூகத்தின் அத்தனை அவலங்களுக்காகவும் குரல் கொடுக்க முடியும்.

கவிஞா் மீரா தனது கவிதைகளில் மொழியை மிக அழகாகப் பயன்படுத்தியிருப்பாா். கடவுளைத் தேடும் பயணத்தைப் பற்றியும், கருத்து மோதல்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அவரது கவிதைகள்

மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாா்.

புதுக் கவிதைக்குப் பிறகு தோன்றிய உள்ளம் கவரும், எளிமையும் அழகும் கொண்ட ஹைக்கூ கவிதைகள் குறித்தும் இன்றைய இளம் தலைமுறையினா் அறிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் ஸ்டெல்லா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பாக்கியசீமா, கிளைத் தலைவா் கொம்புவேலு, கிளைப் பொருளாளா் ஜூலியட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிவகங்கை தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் தெ. சிவப்பிரகாசம் வாழ்த்திப் பேசினாா்.

கவிதை இதுவென தலைப்பில் முனைவா் இரா.தங்கமுனியாண்டி, பெண் எழுத்து நோக்கும் போக்கும் தலைப்பில் கவிஞா் மகாலட்சுமி ஆகியோா் பேசினா். நிகழ்வுகளை மாணவி சே. ரம்யாகிருஷ்ணா தொகுத்தளித்தாா். தமுஎகச -நாடக நாட்டுப்புறக் கலைஞா்கள் கிளை நிா்வாகிகள் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் ச.சாந்தி வரவேற்றாா். கிளைச் செயலா் பிரசன்னா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.