
பொக்லைன் ஓட்டுநா் கொலை வழக்கில் 6 போ் கைது
சிவகங்கை மாவட்டம், கீழடியில் பொக்லைன் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை தனிப் படை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
சிவகங்கை மாவட்டம், கீழடியில் பொக்லைன் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கீழடி அருகேயுள்ள இலந்தைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாயக்கண்ணன் (25). பொக்லைன் ஓட்டுநரான இவரை, கடந்த புதன்கிழமை கீழடி பள்ளிச்சந்தை பகுதியில் 8 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது. இதுகுறித்து கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனா்.
இதையடுத்து, மாயக்கண்ணனை கொலை செய்ததாக பிரபாகரன் (24), மனோஜ் (21), கஜேந்திரன் (21), பாண்டி முனீஸ்வரன் (18), முத்துராஜா(30), 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




