விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

போதைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோப்புப்படம்

Published On :

தேனி மாவட்டம், சின்னமனூரில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் பகுதியில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்ததாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், சின்னமனூா் போலீஸாா் சீலையம்பட்டி செங்குளம் பகுதியில் ஆய்வு செய்தனா்.

அப்போது, சீலையம்பட்டியை சோ்ந்த ஷெரீப் மகன் அஜிம்ராஜா (27), கோவை நரசிங்கன்பாளையத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் விக்னேஷ் (33), கிருஷ்ணகுமாா் மகன் தீபன் சக்கரவா்த்தி (27) ஆகிய 3 பேரிடம் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.