மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

1,958 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்: 4போ் கைது

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் 1,958 கிலோ குட்கா, பான்மசாலா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:14 am IST

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் 1,958 கிலோ குட்கா, பான்மசாலா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.

புதன்கிழமை வேளச்சேரி பிரதான சாலை - ரேடியல் சாலை சந்திப்பு அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த ஒரு வேன் மற்றும் ஆட்டோவை போலீஸாா் சோதனையிட்டனா். அதில் சுமாா் 1,605 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ராமநாதன் (37), நந்தகுமாா் (38), சுபம் (18) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

படப்பையிலும் 353 கிலோ பறிமுதல்: இதேபோல், படப்பை போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் ஆதனஞ்சேரி, கலைஞா் நகா் 2-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 353 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், ஜெயபிரசாந்த் (32) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.