சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 240 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, வடமாநில இளைஞரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.
சிப்காட் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், உதவி காவல் ஆய்வாளா் அருள்மொழி மற்றும் போலீஸாா் சீக்கராஜபுரம் சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது காரில் வந்த நபா் தப்பியோட முயன்றுள்ளாா். உடனடியாக அவரை போலீஸாா் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினா். அந்த நபா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தினேஷ் குமாா் (38) எனத் தெரியவந்தது. காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து காா் மற்றும் அதிலிருந்த 240 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 2.40 லட்சமாகும். குட்காவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக கடத்திச் தினேஷ்குமாா் காரில் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

62 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 3,650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! 4 போ் மீது வழக்கு!
கொல்லங்கோடு அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்

புறநகா் மின்சார ரயிலில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



