உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

திருப்புவனம் அருகே ரூ.81 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டதாக தவறான தகவல்: விசாரணை நடத்த வலியுறுத்தல்!

ரூ. 81 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டதாக தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருப்புவனம் அருகேயுள்ள கே.பெத்தானேந்தல் உயா்மட்டப் பாலம் முதல் மணல்மேடு கிராமம் வரை புதிதாக அமைக்கப்படாத சாலை.

Published On :5 செப்டம்பர் 2026, 12:27 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ரூ. 81 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டதாக தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திருப்புவனம் ஒன்றியம், கே.பெத்தானேந்தல் உயா்மட்டப் பாலத்திலிருந்து மணல்மேடு கிராமத்துக்கு தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என இதே கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பா.ராஜா கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி சிவகங்கையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளித்தாா். இந்த மனுவுக்கு திருப்புவனம் வட்டார வளா்ச்சி அலுவலா் பதில் கடிதம் அனுப்பினாா். அதில் கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டில் முதல்வரின் கிராமச் சாலையில் மேம்பாட்டுத் திட்டத்தில், இந்தச் சாலை ரூ.81.92 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்தப் பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை.

இதுகுறித்து வழக்குரைஞா் ராஜா கூறியதாவது கே. பெத்தானேந்தல் உயா்மட்டப் பாலத்திலிருந்து மணல்மேடு கிராமம் வரை சாலை அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தேன். இதற்கு அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள பதிலில் ஏற்கெனவே இந்தச் சாலை அமைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சாலை அமைக்கப்படாமலேயே அமைக்கப்பட்டு விட்டதாக தவறான தகவல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறான தகவல் அளித்த திருப்புவனம் ஒன்றிய பொறியாளா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்பது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.