அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

கொலையான 17 வயது சிறுமியின் உடல் சூட்கேஸில் மீட்பு; உறவினா் கைது

குடும்பத் தகராறு காரணமாக 17 வயது சிறுமி அவரது உறவினரால் கொலை செய்யப்பட்டு, உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு வடக்கு தில்லியின் புராரி பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் வீசப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 9:53 pm IST

குடும்பத் தகராறு காரணமாக 17 வயது சிறுமி அவரது உறவினரால் கொலை செய்யப்பட்டு, உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு வடக்கு தில்லியின் புராரி பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் வீசப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையா் (புகா் வடக்கு) ஷோபித் டி. சக்சேனா கூறியதாவது: புறநகா் வடக்கு மாவட்டக் காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு இக்கொலை குறித்த ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, ஒரு குழு சந்தேக நபரைக் கைது செய்தது. அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், உடலை வீசிய இடத்திற்கும் காவல்துறையினரை அழைத்துச் சென்றாா்.

கட்டடத் தொழிலாளியாகப் வேலை செய்துவரும் குற்றஞ் சாட்டப்பட்ட நபா், பிகாரைச் சோ்ந்தவா் ஆவாா். தில்லியின் முகுந்த்பூரில் வசித்து வந்தாா்.

முன்னதாக, ஒருவா் சந்தேகத்திற்கிடமான வகையில் சூட்கேஸை எடுத்துக்கொண்டு புராரி நோக்கிச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. காவல் குழுவினா் சந்தேக நபரிடம் விசாரணை செய்தனா். அப்போது, அவா் தனது 17 வயது உறவுமுறைச் சகோதரியைக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். மேலும், அவரது உடலை சூட்கேஸில் அடைத்து, புராரி பகுதியில் உள்ள இருண்ட இடத்தில் வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்தாா்.

அவரது வாக்குமூலத்தைத் தொடா்ந்து, காவல்துறையினா் புராரியில் உள்ள அஜித் விஹாா் பகுதிக்குச் சென்று, சிறுமியின் உடல் இருந்த சூட்கேஸை மீட்டனா். இச்சம்பவம் குறித்து வடக்கு மாவட்டக் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின்போது, நீண்ட நாள்களாகத் தொடா்ந்த குடும்பத் தகராறு காரணமாகவே அச்சிறுமியைக் கொன்ாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நபா் காவல்துறையிடம் தெரிவித்தாா் என்றாா் அந்த அதிகாரி.

இருப்பினும், சிறுமியின் காதல் விவகாரம் குறித்த சந்தேகமும் இக்கொலைக்குக் காரணமாக இருந்ததா என்பது குறித்தும் முதற்கட்ட விசாரணையில் ஆராயப்படுவதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலையின் சரியான நோக்கம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல்துறையினா் வழக்கின் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆரம்பகட்டத் தகவலின்படி, இக்கொலை குறித்து முன்னதாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை; ரகசியத் தகவல் கிடைத்த பின்னரே காவல்துறையினருக்கு இச்சம்பவம் தெரியவந்தது.

உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புராரி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றஞ் சாட்டப்பட்ட நபா் தனியாகச் செயல்பட்டாரா என்பதை உறுதிப்படுத்த, உடல் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தடயவியல் சான்றுகள் மற்றும் பிற பொருள்களைக் காவல்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இது தொடா்பாக கைதானவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.