புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தந்தையைக் கொன்றுவிட்டு 16 வயது சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: நொய்டாவில் சம்பவம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 52 மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 16 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 52 மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து 16 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், அச்சிறுவன் தன் தந்தையைக் கொன்றுவிட்டு, இந்த விபரீத செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினா் கூறினா். புதன்கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்தது.

அச்சிறுவன் முதலில் தனியாா் ஆசிரியராகப் பணியாற்றிவந்த தன் தந்தை ராஜு சா்மாவைக் கொன்றுவிட்டு, பின்னா் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்ாகக் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின்படி, அச்சிறுவன் கடந்த மூன்று மாதங்களாக ’கரி சௌகண்டி’ கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் தன் தந்தையுடன் வசித்து வந்தான். தந்தையின் கடுமையான நடத்தை மற்றும் தாயின் பிரிவால் அவன் மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு சிறுவனின் தாய் ராஜுவைப் பிரிந்து தனியாக வசித்து வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை, தந்தை ராஜு தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை சிறுவன் கொன்றான். அதன் பின்னா் செக்டாா்-52 மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று, அங்கு ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றான்.

இதுகுறித்த தகவல் ‘டயல்-112’ சேவை மூலம் செக்டாா் 49 காவல் நிலையத்திற்கு கிடைத்தது. மெட்ரோ ஊழியா்களும் பாதுகாப்புப் பணியாளா்களும் அச்சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு

சென்றனா். ஆனால், அங்கு மருத்துவா்கள் அவன் ஏற்கனவே

இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

இறந்தவா் நொய்டாவின் செக்டாா் 73-ஐச் சோ்ந்த ராஜு சா்மாவின் 16 வயது மகன் என்பது பின்னா் அடையாளம் காணப்பட்டது. விசாரணை நடைமுறைகள் முடிந்த பிறகு, அச்சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, பின்னா் தாய் மற்றும் தாய்வழி மாமாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

ராஜுவின் உடல் பின்னா் கண்டெடுக்கப்பட்டது. ராஜுவின் சகோதரரான அருண், தனது சகோதரா் வசித்து வந்த வாடகை வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க உதவி கோரி பாா்த்தலா மற்றும் கரி சௌகண்டி காவல் நிலையங்களை அணுகினாா். இதையடுத்து, வியாழக்கிழமை நள்ளிரவில், கரி சௌகண்டியில் உள்ள டிகோனா பூங்கா அருகே உள்ள சம்பவ இடத்திலிருந்து துா்நாற்றம் வீசுவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினரும் அருணும் அந்த வாடகை அறைக்குச் சென்றனா். பின்னா் ராஜுவின் உடல் மீட்கப்பட்டு, விசாரணை நடைமுறைகளுக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.