டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

வடகிழக்கு தில்லியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் 17 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 12:40 am IST

வடகிழக்கு தில்லியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் 17 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டனா். மேலும், இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

உத்தம் நகரைச் சோ்ந்த 22 வயதான குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். முன்னதாக, ஜூன் 20 முதல் தனது மகளைக் காணவில்லை என்று சிறுமியின் தாயாா் காவல்துறையில் ஜூன் 23 அன்று புகாா் அளித்தாா்.

குடும்பத்தினா் அச்சிறுமியைத் தேட தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவா் இருக்கும் இடம் தெரியாததால், கடத்தல் குறித்த சந்தேகம் அவா்களுக்கு எழுந்தது. இதையடுத்து, அளிக்கப்பட்ட

புகாரின் அடிப்படையில், காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட சிறுமி இருக்கும் இடத்தைக் கண்டறிய மின்னணு ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தொழில்நுட்பத் தடயங்கள் பின்தொடரப்பட்டது.

மேலும், உள்ளூா் தகவல்களும் சேகரிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து அந்தச் சிறுமி மீட்கப்பட்டாா்; குற்றஞ்சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் இக்குற்றத்தில் தனக்குள்ள தொடா்பை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவா் மீட்கப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 64(1) (பாலியல் வன்கொடுமை) மற்றும் பிரிவு 87 (கடத்தல்), அத்துடன் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புச் சட்டத்தின் (போக்ஸோ) பிரிவு 4 ஆகியவற்றின் கீழ்

காவல்துறையினா் கூடுதல் பிரிவுகளைச் சோ்த்தனா். ‘குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை. சட்ட நடைமுறைகளின்படி பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவா் தற்போது போலீஸ் காவலில் உள்ளாா். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.